Description
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சர்வஜனப் விருப்பம் உள்ளவர்களாக இருப்பவர், எழிலானவர், சூரத்தனம் உடையவர். குணமுள்ளவர், சாதுரியமான பேச்சினை உடையவர், சிநேகம் உடையவர். நிலையில்லாத செல்வத்தைக் கொண்டவர்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருச்சியிலிருந்து முசிறி சென்று அங்கிருந்து காருகுடி என்னும் இடத்தில் உள்ள கயிலாயநாதர் ஆலயத்திற்கு கோவிலுக்கு சென்று வணங்கலாம்.சந்திரனுக்கும், ரேவதிக்கும் சிவபார்வதியும் காட்சி கொடுத்ததால், இது ரேவதி நட்சத்திர கோவிலாக விளங்குகிறது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரநாளில், இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியாக ( 27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள்) சிவனுககும், அம்பாளுக்கும் பொருட்களை சமர்ப்பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடைபட்ட செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது, சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து தொழுதால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள்.