Description
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு
நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது சிறப்பு காலை 11 மணி முதல் ஒரு மணி வரை மாலை 5 மணி
முதல் 6 மணி வரை நடை திறந்திருக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம் செல்வவளமும் மக்கள்
செல்வாக்கும் இவர்களுக்கு இருக்கும் கம்பீரமான தோற்றம் கொண்டிருப்பர் மனோதிடம் பெற்றிருப்பர் கோபம்
இவர்களின் இயல்பாக இருந்தாலும் தேவையான விஷயங்களில் நிதானத்தையும் கடைபிடிப்பர்
கோயில் பிரகாரத்தில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன் மனைவியுடன் அதிகார நந்தி இரட்டை
பைரவர் சூரியன் தட்சிணாமூர்த்தி பிரம்மா துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி உள்ளது இக்கோயிலுக்கு அருகில் பட்டீஸ்வரம் துர்க்கை தாராசுரம் கோயிலும் உள்ளன.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் முந்திரிப்பருப்பு நிலக் கடலை மாலை கட்டி வெளி
மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம் கோவில் மிகவும் சிதிலமடைந்துள்ளது
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் சேர்ந்து நம்மை வாழ்வளிக்கும் இறைவனின் தளத்திற்கு திருப்பணி செய்வது அவசியம் இது ஒரு அவிட்ட நட்சத்திர தலம் பிரம்மனுக்கு
அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குரிய தலமானது எனவேதான் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அடிக்கடியோ தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ ஆவணி அவிட்டம் அன்று இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே
மாறிவிடும் என்பது ஐதீகம் குழந்தைகளின் கல்வியறிவு வியாபார விருத்தி மன உளைச்சல் நீங்க தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது
சிறப்பு கைரேகை போல் காலுக்கும் ரேகை உண்டு இந்த கால்ரேகை இத்தலத்தில் படும்படி அவிட்ட நட்சத்திர நாளில் தரிசனம் செய்வது சிறப்பு மூன்றாம்
குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது