Description
இந்த நட்சத்திரக்காரர்கள், முத்துக்குமாரசாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் திருமலைக்கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் தலத்திற்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்கு உரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன.செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை. விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளி கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்பது நம்பிக்கை. விசாக நட்சத்திரத்தினர் திருமலை முத்துக்குமார சுவாமி தலத்திற்கு சென்று முருகனை வழிபட்டுவந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும்..தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற ஊர் இருக்கிறது. இங்கு இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை
முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக இருந்து முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். இவரை ‘முத்துக்குமாரசுவாமி’ என்றும்,குமாரசாமி’ என்றும் அழைக்கின்றனர்.ஆகையால், இந்த கோவிலுக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், நம் சந்ததிகளுக்கு நல்ல சிறப்பான வாழ்வு அமையும். நல்ல வாரிசுகள் உருவாகும் என்பது ஐதீகம்.