Description
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் திறமையான பேச்சாற்றலும், சமயோஜித புத்தி உள்ளவர்கள் ஆவர்.இராமபிரானின் சகோதரன் லட்சுமணன் பிறந்த நட்சத்திரம் ஆயில்யம்.ஆயில்யம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பவர் புதன் ஆவர்.முன்பொரு காலத்தில் தவத்தில் இருந்த போது துர்வாச முனிவருக்கு தொல்லை கொடுத்ததால் கந்தர்வன் நண்டாக பிறந்து சாபம் பெற்றான்.சிவபெருமானை நினைத்து தாமரை பூக்களை கொண்டு அபிஷேகம் செய்ததால் அவன் சாபம் நீங்க பெற்றான்.. இதனால் தான் சிவபெருமான் கற்கடேஸ்வரராக அழைக்கப்பட்டார்…அதேபோல தான் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்ட சோழ மகாராஜனுக்கு மருத்துவரின் உருவில் வந்த ஈசனும் அம்மையும் அவருக்கு மருந்தளித்தனர்… தண்ணீரில் விபூதி கலந்து குடிக்க சொல்லி, கழுத்தில் ருத்ராட்ச மாலையை கட்டிவிட்டு சென்ற பிறகு தான் அதிகாலையில் எழுந்த மன்னனின் உடல் பூரண குணமானது… ஈசனின் மகிமையை உணர்ந்த அவர் கோயிலை அமைத்து ஈசனை அருமருந்துடையார் எனும் நாமத்திலும், தாயாரை அருமருந்து நாயகியாகவும் வழிபட்டதாக கூறுகிறது வரலாறு..இங்கு மூலவராக கற்கடேஸ்வரரும், தாயார் அருமருந்து நாயகியாகவும் மற்றொரு சன்னதியில் அபூர்வ நாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர்…இங்குள்ள ஈசனுக்கும், அம்பாளுக்கும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அந்த எண்ணெயை உண்டு வர நோய்கள் அண்டாத ஆரோக்கிய வாழ்வினை பெறுவர்…மகாசிவராத்திரி, பிரதோஷ நாட்களில் மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட எடுத்த காரியம் நிறைவேறும்.அமாவாசை நாட்களில் இறைவனை கும்பிட்டு விட்டு கடலில் சிறிது பால் ஊற்றி பின் வாயில்லா ஜீவன்களுக்கு பால் அருந்த கொடுப்பதால் தீவினைகள் அண்டாமல் இருக்குமாம்..