Loading Events

« All Events

  • This event has passed.

14-Jan-2026 – போகி பண்டிகை

January 14

போகி பண்டிகை

 

போகி, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது. போகி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது.

 

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு சிறப்பாக போகி கொண்டாடப்படுகின்றது.

​போகியின் சிறப்புகள்

 

பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் இந்த போகியின் மிக முக்கிய நோக்கம். அதாவது பயனற்ற பழையனவற்றை வெளியேற்றி, விட்டெறியக் கூடிய நாளாக கருதப்படுகின்றது.

 

பழையனவற்றைப் போக்கக் கூடிய இந்த பண்டிகைக்கு போக்கி என்ற பெயர் இருந்தது, அது காலப்போக்கில் மருவி போகி என மாறியுள்ளது. அந்த கால வழக்கப்படி கடந்த ஆண்டிற்கு நன்றியை தெரிவிக்கும் விதமாகவும், புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

​சுத்தமாகும் வீடு

 

வீட்டில் உள்ள பழைய தேவைற்ற பொருட்களை புறக்கணித்து, வீட்டில் புதியனவற்றைப் புகுத்த வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே போகி கொண்டாடப்படுகின்றது. இதனால் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களும், குப்பைகளும் ஒழிக்கப்படும். இதன் மூல வீடு சுத்தமாகும்.

 

பொங்கல் பண்டிகையை ஒட்டி வீட்டிற்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவர். முன்னர் சுண்ணாம்பு பூசி வந்தனர். இதனால் வீட்டில் இருக்கும் பூச்சி, வண்டுகள் சுண்ணாம்பினால் அங்கிருந்து ஓடி விடும் அல்லது மடிந்து விடும். இதனால் வீட்டில் இருப்பவர்கள் அதன் தொல்லைகளிலிருந்து விடுபடுவார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் ஒழுக்க கேடுகள். மனக்கசப்புடன் கூடிய உறவு, வேண்டாத தீய எண்ணங்களை நீக்கி, உறவை மேம்படுத்துவதற்கான பண்டிகை இதற்கு ‘ருத்ர கீதை ஞானயக்ஞம்’ என்ற அழைக்கப்படுகிறது. அக்னியில் பழைய தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனைகளையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாள்.

இதன் மூலம் ஆத்மாவை உணர்தலும், ஆத்மாவை தூய்மையாக்குதல் நிகழ்வு நடக்கும்.

​போகி பண்டிகை பூஜை

 

போகி தினத்தின், வைகறையில் அதாவது அதிகாலையில் ‘நிலைப் பொங்கல்’ நிகழ்வு நடத்த வேண்டும். அதாவது வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகு படுத்தி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்து, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்குவர்.

 

இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் விலகி லெட்சுமிகாட்சம் பெருகும்.

Details

Date:
January 14