Description
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 19வது தலம்
திருவிழா – ஆனித்திருமஞ்சனம் சிவராத்திரி திருக்கார்த்திகை இத்தலத்தின் சிறப்பு இறைவன் சுயம்புலிங்கமாகஅருள்பாலிக்கிறார் கோவில்
நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்
முகவரி
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர்
திருக்கோயில் திருநின்றியூர் திருநின்றியூர்
போஸ்ட் எஸ் எஸ்
நல்லூர் வழி சீர்காழி
தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம்
மூலவர் மகாலட்சுமீஸ்வரர் உலகநாயகித் தாயார் தலவிருட்சம் வில்வம் தீர்த்தம் நீலப் பொய்கை புராண பெயர் திருநின்றவூர்மாவட்டம் நாகப்பட்டினம் பாடல் பெற்ற தலம் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் தேவாரப் பதிகத்தில் இடம் பெற்றுள்ளதலம்
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் மல்கி நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்ளமேதிருநாவுக்கரசர
இது ஒரு அனுஷம் நட்சத்திர தலம் சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் வழியாகவே சென்றுதிரும்புவான் ஒருசமயம் அவன் இத்தலத்தை கடந்து சென்றபோது காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது
இதற்கான காரணத்தை கண்டறிய, ஒரு இடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு பால் சொரிவதாக கேள்விப்பட்டு மன்னனும்அவ்விடம் சென்றபோது சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது ரத்தம் வெளிப்பட்டது.பின் அதே இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டார். இந்த தலம் என்பதால் திருநின்றியூர் என்றும் மகாலட்சுமி வழிபட்டதால்திருநின்றவூர் என்றும் பெயர் பெற்றது. அனுஷம் நட்சத்திர தினத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ அனுஷம் நட்சத்திரத்தில்பிறந்த நாளிலோ திருமண நாளிலோ துவாதசி வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களில் இத்தல சிவனுக்கு சந்தன காப்பிட்டு அதில் மாதுளைமுத்துக்களை பதித்து வழிபடுவதால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்
செல்லும் வழி மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது அருகிலுள்ளரயில் நிலையம் தஞ்சாவூர் அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி தங்கும் வசதி மயிலாடுதுறை
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் மற்ற தோஷங்களால்பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பரிகார பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர்