Description
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் மூலவர் அக்னீஸ்வரர்
தாயார் சுந்தரநாயகி
தலவிருட்சம் வன்னி மற்றும் வில்வ மரம் தற்போது பெயர் நல்லாடை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை மாதத்தில் சோமவாரம், மார்கழி மாதத்தில் தனுர் பூஜை, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம்,ஆருத்ரா தரிசனம் கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு இக்கோயிலில் திருவிழாக்கள் ஆகும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனைத் தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது இத்தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும் சோழர்களால் கட்டப்பட்டது பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம் நன்றி உணர்வு கொண்டவர்களாகவும் எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்பவர்களாக தான தர்மங்கள் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர் அதிர்ஷ்ட தேவதையின் அருளால் அவை யாவும் தொடங்கும் தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர் பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் திருமணத்தடை நீங்க குழந்தை பாக்கியம் கிடைக்க கல்வியில் சிறந்து விளங்க வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள் பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு.பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால் பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு குறிப்பாக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும் மேற்கு நோக்கிய கோயில்களில் முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம் இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும் அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள் சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம் இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தல் ஆடைஎன வழங்கப்பட்டு நாளடைவில் மருவி நல்லாடை ஆனது செல்லும்வழி மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோமீட்டர் நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை உள்ளது இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி தங்கும் வசதி மயிலாடுதுறை