Description
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.மிருகஸீரிஷம் நட்சத்திரக்காரர் பிறப்பிலிருந்தே புத்தி கூர்மையும் திறமையும் பெற்றிருக்கும் அதிர்ஷ்டகாரர் ஆவர்.இவர்களின் புத்தி கூர்மையும் துணிச்சலும் பலமென்றால் இவர்களின் கோபம் சில சமயம் இவர்களை சறுக்கிவிடும் என்பதும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும். ஆனால் என்னதான் சரிவு மேல் சரிவு வந்தாலும் மீண்டும் வலுப்பெற்று போராடும் குணம் கொண்ட மிருகஸீரிஷ ம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வு செழிக்க கீழ்க்காணும் கோவிலுக்கு செல்ல வேண்டும். தங்கள் வாழ்வில் ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில் அடிக்கடி செல்வது நன்மை அளிக்கும். அடிக்கடி செல்ல முடியாத நிலையில் ஒருமுறையாவது செல்ல வேண்டும். இந்த நட்சத்திர நாளிலோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால் கருட வாகனத்தில் தோன்றி நம்மை காத்தருள்வார் என்பது ஐதீகம். கோயிலில் உற்சவரான ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நல்ல சம்பளத்துடன் கூடிய உயர்பதவி வேண்டுபவர்கள்,படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். தங்களது நட்சத்திரத்தன்று இத்தல இறைவனை வழிபாடு செய்தால் அவர்களின் பிரச்சனை உடனடியாகவே தீரும் என்பது நம்பிக்கை.