Description
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.சுவாமி ஆகாசபுரீஸ்வரர் இங்கு பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். இங்குள்ள அம்பிகை, மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால் மங்களாம்பிகை என்று பெயர். ஆகாச வெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, மாலை அணிவித்து, கேசரி நைவேத்யம் செய்து வணங்கினால் வாழ்வு சிறக்கும். திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்