Description
இந்த நட்சத்திரக்காரர்கள் திருவானேஷ்வர் திருக்கோவில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.ஏழு ஸ்வரங்களுடன் இசையில் சிறந்து விளங்க இத்தலத்து இறைவனை வழிபட சிறந்த பலனைத்தரும். சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வார காலம் தங்கி தியானம் செய்துள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் இது .பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து திகழ பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது ஐதீகம்.கல்விக்குரிய ஸ்தலம் இது