Description
இந்த நட்சத்திரக்காரர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம்-622 303 புதுக்கோட்டை மாவட்டம்.பூர தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். அம்மன் சிவனது தரிசனங்கள் அனைத்தையும் பெற பூராக்னியில் தவம் செய்தாள். இவளது தவத்தில் மகிழந்த இறைவன் இத்தலத்தில் ஆடிப்பூர நன்னாளில் சிவ தரிசனம் தந்தார். மேலும் பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீ தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உண்டு. இதே ஏழு தீர்த்தங்கள் இத்தலத்திலும் இருப்பதால் இத்தலம் பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. எனவே தான் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாள், பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய முக்கிய நாட்களிலும், அடிக்கடிசென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியதலமானது.