Description
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.கிருஷ்ணரின் பிறந்த நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் .ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய கோயிலாகக் கருதப்படும் திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49-ஆவது திவ்ய தேசம் ஆகும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.இக்கோவில் ரோகிணி நட்சத்திரக் கோவில் ஆகும்.ரோஹிணி தேவி இந்த கோவில் பெருமாளை வணங்கி வழிபட்டு, சந்திரன், தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோஹிணியையும், அக்னி சக்தி பெற்ற கார்த்திகையையும், மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்ததாக வரலாறு கூறுகிறது. தனக்கு ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனமும் காட்டிய பெருமாளுக்கு இறையருள் வேண்டி, தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன், சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி எட்டாம் தேதிகளில் இங்கு வந்து அர்ச்சனை செய்தால், தாராளமான பலன்கள் கிடைக்கும்.