Description
இந்த நட்சத்திரக்காரர்கள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய கோவில், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அலமேலு மங்கா சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தப்பட்டாள். உடனே அவள் இக்கோவில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார்.அன்றிலிருந்து இக்கோவில் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது