Description
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.இந்த கோவிலில் பிரம்மதேவன் பூஜை செய்த ஸ்தலம் என்பதால் இந்த ஆலயம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்று பெயர் பெற்றது. உத்திராடம் நட்சத்திரத்திற்கு பரிகார கோவில் ஆகும்.பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட செய்வினை கோளாறு பிரச்சனைகளை போக்கும் கோவிலாகவும் திகழ்கிறது.இந்த கோவிலில் அமாவாசை வழிபாடு மிக சிறப்பானதாகும்.ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள்.27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26 நட்சத்திரம் தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக முழுமுதல் கடவுளான விநாயகரை சுட்டிக்காட்டி இருக்கவேண்டும்.உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு.