Description
இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது..இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இக்கோவில் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய கோவில் இது.அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களது நட்சத்திர நாளில் இக்கோவில்லில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு. இதனால் பணம் கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.