கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில்‌ ஏற்றப்படும் தீபம் பரணி தீபம்‌ ஆகும். கார்த்திகை மாதத்தில்‌ வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்று திருவண்ணாமலையில்‌ நடக்கும்‌ திருக்கார்த்திகை தீபத்‌ திருவிழா ஆகும். திருவண்ணாமலை சிவபெருமானை வணங்கக்கூடிய ஸ்தலம்‌ ஆகும். இங்கு கார்த்திகை மாதம் அன்று திருக்கார்த்திகை தீபம்‌ ஏற்றி வழிபடுவது மிகவும்‌ விசேஷம்‌ ஆகும். இந்த தீபத்‌ திருவிழாவானது, திருவண்ணாமலையில்‌ மட்டுமின்றி, எல்லா வீடுகளிலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள்‌.

 

இந்நிலையில் திருவண்ணாமலையில் கார்த்திக்கை தீபத் திருநாளை முன்னிட்டு, பரணி தீபம்‌, அண்ணாமலையார்‌ தீபம்‌ (மகா தீபம்‌), விஷ்ணு தீபம்‌, நாட்டுக்கார்த்திகை தீபம்‌, தோட்டக் கார்த்திகை தீபம்‌ என 5  நாட்கள்‌ தீபங்கள்‌ ஏற்றப்படும்‌. பொதுவாகவே, முதல்நாளில் பரணி தீபம்‌ ஏற்றப்படும். ஏனெனில், பரணி  காளிக்குரிய நாள் ஆகும். அந்நாளில், காளிதேவியை வழிபடும்‌ நோக்கத்தில்‌ பரணி தீபத்தை ஏற்றுவார்கள்.

அதுபோல், அண்ணாமலையார்‌ தீபமானது, கார்த்திகை மாதக்‌ கிருத்திகை நட்சத்திரத்தில், திருவண்ணாமலையின் உச்சியில்‌ விளக்கேற்றப்படும். அதே சமயத்தில், மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்குகளை ஏற்றுவார்கள்.. இது சிவபெருமானை குறித்து கொண்டாடும்‌ விழா என்பதால், இதை “அண்ணாமலையார்‌ தீபம்‌” என்று அழைக்கப்படுகிறது.

பரணி தீபமானது, அண்ணாமலையார்‌ கருவறையில்‌ அதிகாலையிலேயே ஏற்றப்படும். அதன் பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ மேலே சொன்ன அந்த 5  தீபங்கள் ஏற்றப்படும். பரணி தீபம்‌ என்பது, கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில்‌ ஏற்றப்படும் தீபம் “பரணி தீபம்‌” ஆகும். இன்னும் சொல்லப்போனால், சிவனின்‌ ஐந்து அம்சங்களான படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌, மறைத்தல்‌, அருளல்‌ ஆகியவற்றை காட்டும்‌ விதமாக இந்த பரணி தீபம்‌ ஏற்றப்படுகிறது. அதன் பிறகே, திருவண்ணாமலை உச்சியில்‌ மாலை 6 மணிக்கு மகாதீபம்‌ ஏற்றப்படுகிறது.

Leave a comment