மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். காரடையான் நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும். மாசி மாதத்தின் கடைசி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் தினத்தில் தான் காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.
