இந்து தெய்வங்களில் முழுமுதற்கடவுள் என போற்றப்படும் விநாயகர் பூவுலகில் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறையில் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இது விநாயகருக்கான முக்கிய வழிபாட்டு நாளாகவும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் கட்டாயம் விநாயகப் பெருமானை வீடுகளிலும் கோவில்களிலும் சென்று வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் அன்றைய தினம் விநாயகருக்கு உரிய தும்பை பூ, செம்பருத்தி பூ சங்குப்பூ, போன்ற 21 மலர்களை வைத்து வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் கட்டாயம் வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல் ஆகிவை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை பிரசாதத்தை படைத்து வழிபாடு செய்வது அவரை மனமகிழச் செய்யும்.